தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சர்வதேச விருதுகளை வென்ற ஆர்யா திரைப்படம் - Magamuni movie review

சென்னை: ‘மகாமுனி’ திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளதாகப் படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஆர்யா
ஆர்யா

By

Published : Jun 9, 2021, 6:45 AM IST

‘மௌனகுரு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சாந்தகுமார். இதனையடுத்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர் இயக்கத்தில் வெளியான ‘மகாமுனி’ படத்தில் நடிகர் ஆர்யா இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். ஸ்டூடியோ க்ரீன் தயாரித்திருந்த இப்படம் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் ‘மகாமுனி’ திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மகாமுனி திரைப்படம் ஒன்பது சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. தற்போது இரண்டு விருதுகள் இறுதியாகிவிட்டன. இன்னும் இரண்டு விருதுக்கான செலக்‌ஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'சூர்யா 40' அப்டேட்: தலைப்பு மாஸா வரும்..கொஞ்சம் டைம் கொடுங்க - இயக்குநர் பாண்டியராஜ்

ABOUT THE AUTHOR

...view details