தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மிரட்டிய 'மகாமுனி' ஆர்யா - சினிப்பீக்

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள 'மகாமுனி' படத்தின் கண்ணோட்டம் (sneak peek) வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Maga muni

By

Published : Aug 29, 2019, 4:35 PM IST

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் நடிகர் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘மகாமுனி’. இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சாந்த குமார். இவரின் முந்தைய படமான ‘மௌனகுரு’, தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனால் ‘மகாமுனி’ படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அருண் பத்மநாபன் ஒளிப்பதிவில், சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுத, எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.

‘மகாமுனி’ படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. ஆர்யா நல்ல ஹிட் கொடுத்து நீண்டகாலமாகிறது, இப்படம் அவருக்கு ஒரு நல்ல கம் பேக்-ஆக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் கண்ணோட்ட (sneak peek) வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ வழங்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details