தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'மாஃபியா'அருண் விஜய் எனக்கு கிடைத்த ஆச்சரியமான நபர் - பிரியா பவானி சங்கர்! - மாஃபியா

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஃபியா படத்தை பற்றிய அறிவுப்பு ஒன்றை நடிகை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Priya Bhavani Shankar

By

Published : Aug 18, 2019, 8:19 PM IST

2016ஆம் ஆண்டு வெளியான 'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் நீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து அரவிந்த் சுவாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடிப்பில் 'நரகாசூரன்' படத்தை இயக்கினார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், கார்த்திக் நரேன் நடிகர் அருண் விஜயை வைத்து 'மாஃபியா' என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார். அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

தற்போது பிரியா பவானி சங்கர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், 'மாஃபியா படத்தில் எனது காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மகிழ்ச்சியான, உற்சாகமான, மிக வேகமாக நடந்த படப்பிடிப்பு. கார்த்திக் நரேனின் 3 பவுண்ட் எடை கொண்ட விசேஷ மூளையின் திறன் பற்றி நாங்கள் இன்னும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறோம். கனிவு, அர்ப்பணிப்பு, விடா முயற்சி, திறமை, நேர்மறை எண்ணம் எல்லாம் மொத்தம் கொண்ட ஒரு ஆச்சரியமான நபர் அருண்விஜய். எதிர்பாராமல் கிடைத்த நண்பர்.

ஒரு மாதம் விடாமல் படப்பிடிப்பு நடந்தது போலவே எங்களுக்குத் தெரியவில்லை. குழுவில் இருக்கும் அனைவரும் இந்தப் படப்பிடிப்பை மறக்க முடியாததாக, விசேஷமானதாக மாற்றினார்கள். இப்படிப் பல காரணங்களுக்காக மாஃபியா எப்போதும் என் இதயத்துக்கு நெருக்கமான படமாக இருக்கும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் தயாராகியுள்ளதாகவும், சூர்யாவின் காப்பான் படத்துடன் திரையரங்குகளில் மாஃபியா டீஸர் ஒளிபரப்பாகும் எனவும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details