'பரதேசி' படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்பு ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'மெட்ராஸ்' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். மேரி கதாபாத்திரத்தில் நடித்த ரித்விகா தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
அதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ் சீசன் 2' நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னர் பட்டத்தையும் தட்டிச் சென்றார். தற்போது 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' படத்தில் நடித்து வருகிறார்.