தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிம்புவின் “பத்து தல” படத்தில் இணைந்த கலையரசன்! - பத்து தல படம்

சிம்பு நடிக்கும் பத்து தல படத்தில் நடிகர் கலையரசன் நடிக்க உள்ளார்.

சிம்புவின் “பத்து தல” படத்தில் இணைந்த கலையரசன்!
சிம்புவின் “பத்து தல” படத்தில் இணைந்த கலையரசன்!

By

Published : Jan 14, 2021, 4:32 PM IST

சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் தொடர்ந்து நடிகர்கள் இணைந்து வருகின்றனர். நடிகை ப்ரியா பவானி சங்கர், டீஜே, மனுஷ்யபுத்திரன் போன்ற மாறுபட்ட நட்சத்திர கூட்டணியில் உருவாகிவரும் படத்தில், தற்போது நடிகர் கலையரசன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஸ்டுடியோ க்ரீன் ஃபிலிம்ஸ் (Studio Green Films ) நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரிக்க, “சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை” பட புகழ் இயக்குநர் கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார்.

இது குறித்து இயக்குநர் கிருஷ்ணா கூறுகையில், "மிகவும் கனமான ‘அமீர்’ எனும் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார் கலையரசன். இக்கதாபாத்திரம் படத்தில் சிறிதளவு நேரமே வந்தாலும் கதையில் நிறைய அழுத்தம் தரும் பாத்திரம் ஆகும். பிரபல நடிகராகவும், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் கொண்டவராகவும் உள்ளவரை நடிக்க வைக்க நினைத்தேன். கலையரசனை அணுகும்போது முதலில் இப்படத்திற்கு ஒப்புக்கொள்வாரா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் படத்தில் கதாபாத்திரத்தின் அழுத்தம் அறிந்து அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார்" என்றார்.

இதையும் படிங்க...தமிழரும் ஜல்லிக்கட்டும்- வீரம் செறிந்த காதல் கதை!

ABOUT THE AUTHOR

...view details