தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பா.இரஞ்சித்தின் அடுத்த படத்தில் ஹீரோவாகிறார் 'மெட்ராஸ் ஜானி' - பா ரஞ்சித்

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படங்களை தொடர்ந்து இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் 'மெட்ராஸ் ஜானி' ஹரிகிருஷ்ணன் ஹீரோவாக நடிக்கிறார்.

மெட்ராஸ் ஜானி

By

Published : Mar 20, 2019, 5:01 PM IST

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களின் இயக்குநர் பா.இரஞ்சித், நீலம் புரொடக்‌ஷன் எனும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பரியேறும் பெருமாள் எனும் படத்தை தயாரித்தார். சமூகத்தில் நிலவும் சாதி ரீதியான முரண்களை, எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படி அப்படம் பேசியது. இப்படத்தை ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ் இயக்கிருந்தார். இந்தப படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றது.பல்வேறு விருதுகளையும் பெற்று வருகிறது.

அடுத்து அட்டகத்தி தினேஷ் நடிக்கும் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு எனும் படத்தை தாயாரித்து வருகிறார். இப்படத்தை தன்னுடைய உதவியாளர் அதியன் ஆதிரா இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், பா.இரஞ்சித் தயாரிக்கும் மூன்றாவது படத்தில் 'மெட்ராஸ்' படத்தில் ஜானியாக நடித்து பிரபலமான ஹரிகிருஷ்ணன் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். தமிழகத்தின் தென்மாவட்டத்தில் நடைபெறும் கிராமியம் கலந்த காதல் கதையாக உருவாக்கவுள்ள இப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலை முடிவடைந்த நிலையில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநரே இயக்க உள்ளார்.



ABOUT THE AUTHOR

...view details