தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

குளித்துக்கொண்டே கரோனா தத்துவம் பேசும் மடோனா - பாடகி மடோனா கவர்ச்சி வீடியோ

கரோனோவால் மனிதர்களுக்கிடையே சமநிலை ஏற்பட்டிருப்பதாக கண்டறிந்துள்ள பாப் பாடகி மடோனா, அதை கவர்ச்சி வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

Madonna quarantine for COVID-19
Madonna's bizarre bathtub video about coronavirus

By

Published : Mar 24, 2020, 8:34 AM IST

லாஸ் ஏஞ்சல்ஸ்: கரோனாவுக்கு ஏழை, பணக்காரன் வித்தியாசம் தெரியாது. அது அனைவரையும் சமமாக பார்க்கிறது என்று பாத்டப்பில் நிர்வாணக் கோலத்தில் குளித்தவாறு வீடியோ வெளியிட்டு தத்துவ மழை பொழிந்துள்ளார் பாப் பாடகி மடோனா.

ஹாலிவுட்டில் புகழ் பெற்ற பாப் பாடகி மடோனா, ரோஜாப்பூ தூவப்பட்டிருக்கும் பாத்டப்பில் நிர்வாணக் கோலத்தில் குளிக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். பாரபட்சம் இல்லாத கரோனா என்று வீடியோவில் பதிவிட்டுள்ள அவர், கரோனா பற்றி தத்துவம் பேசியுள்ளார்.

அதில், "கரோனோவுக்கு நீங்கள் ஏழையா, பணக்காரனா என்கிற வித்தியாசம் தெரியாது. நீங்கள் புகழ்பெற்றவராகவும், புத்திசாலியானவராகவும், வேடிக்கையான மனிதராகவும், அற்புதமான கதைகள் சொல்பவராகவும் இருக்கலாம். ஆனால் எந்த பாரபட்சமும் பார்க்காமல் உங்களையும் தாக்கலாம்.

சரி சமமாக அனைவரையும் பாவிப்பதால், அதன் கொடூரத்தன்மையே, எல்லாராலும் பெரிய விஷயமாக பார்க்க வைக்கிறது. அத்துடன் மனிதர்களாகிய நம்மை பல வகைகளில் சரி சமமாக செயல்பட வைக்கிறது" என்று பேசியுள்ளார்.

கரோனா வைரஸ் பெரும் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்வது குறித்தும், அந்தத் தொற்று பரவாமல் இருப்பது குறித்து பிரபலங்கள் பலரும் தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இந்த வரிசையில் கரோனாவால் மனிதர்களுக்குள்ள சமநிலை ஏற்பட்டிருப்பதாக கண்டறிந்துள்ள மடோனா, அதை வித்தியாசமான வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

தற்போது கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளும் பொருட்டு தன்னை தனிமைப்படுத்தியுள்ளார் மடோனா.

ABOUT THE AUTHOR

...view details