சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாகப் பரவிவருகிறது. கரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க, இன்று முதல் 21 நாட்களுக்கு மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று திரைத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் சிலர் ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகையும், பிக் பாஸ் போட்டியாளருமான மதுமிதா, அரசு அறிவிக்கும் அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும் என்று ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் பேசியதாவது, ”தற்போது நாம் எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். இந்தத் தொற்று பரவாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் ஒரு முறை கையை கழுவ வேண்டும். கையை கழுவாமல் வாய், மூக்கு ஆகியவற்றை கைகளால் தொடக் கூடாது.