சர்வதேச நீச்சல் போட்டியின் (Asian Age Group Swimming Championship) 4x100 மீ ஃப்ரீஸ்டைல் ரிலே (Group II) பிரிவில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அவருடன் உத்கர்ஷ் படில், சஹில் லஷ்கர், ஷோன் கங்குலி ஆகியோரும் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வெள்ளிப் பதக்கம் வென்று மேடியை மகிழ்ச்சியடையச் செய்த வேதாந்த் - ஆசிய விளையாட்டு
சர்வதேச நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், இந்தியா சார்பில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
Madhavan's Son Vedaant Wins Silver At International Swimming Championship
இதுகுறித்து மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஏசியன் கேம்ஸில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. கடவுளின் கருணையால் வேதாந்த் இந்தியா சார்பாக முதல் பதக்கத்தை வென்றுள்ளான் என பதிவு செய்திருக்கிறார்.
இதற்கு முன்பு தேசிய அளவிலான நீச்சல் போட்டியில், வேதாந்த் தங்கப் பதக்கம் வென்றார். அதேபோல் தாய்லாந்தில் நடைபெற்ற போட்டியில் வெங்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.