சென்னை: ஜிம் செல்லாமல், இப்படியொரு நாள் என் வாழ்நாளில் வரும் என நினைத்துப் பார்த்ததில்லை என்று நடிகர் மாதவன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
கரோனோ பீதியால் சினிமா படப்பிடிப்புகள் பொரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் திரைப்பிரபலங்கள் அனைவரும் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
குறிப்பாக நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் தங்களது உடலைப் பேணி காக்க தவறாமல் ஜிம்முக்கு செல்வார்கள். ஆனால் தற்போதையே சூழ்நிலையில் ஜிம்முக்கும் செல்ல முடியாமல் பலரும் தவித்து வருகிறார்கள்.
இதையடுத்து ஜிம் செல்ல முடியாமல் இருப்பது குறித்து நடிகர் மாதவன் தனது ட்விட்டரில், "ஆரோக்கிமாக இருக்க வேண்டுமானால் ஜிம்முக்கு செல்லாமல் இருக்க வேண்டும் என்றொரு நாள் என வாழ்நாளில் வரும் என நினைத்துப் பார்த்ததில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
மாதவனின் ட்வீட்டுக்கு ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், வீட்டிலிருந்தபடியே உடற்பயிற்சி எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளனர்.
பொதுவாக உடல்நலத்தைப் பேணி காக்கவே அனைவரும் ஜிம்முக்கு செல்கின்றனர். ஆனால் தற்போது அதே உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கு, கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகப் பலரும் அங்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கால் செய்தால் கொரோனா- மிரண்டு போன மாதவன்!