தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கைகூப்பி வேண்டுகோள்விடுத்த காவலர்: மாதவன் பாராட்டு

போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரஷீத்தின் செயலைப் பாராட்டி மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

கும்பிட்டு வேண்டுகோள் விடுத்த காவலர்- பாராட்டு தெரிவித்த மாதவன்!
கும்பிட்டு வேண்டுகோள் விடுத்த காவலர்- பாராட்டு தெரிவித்த மாதவன்!

By

Published : Mar 27, 2020, 2:23 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. மேலும் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், மக்கள் வெளியே செல்கின்றனர்.

இந்நிலையில் சென்னையில் பலர் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றனர். அவ்வாறு செல்லும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரஷீத், கைகூப்பி வெளியே செல்ல வேண்டாம் என்று உருக்கமாக வேண்டுகோள்விடுத்தார். அவரது வேண்டுகோளால் கலங்கிய வாகன ஓட்டிகளில் ஒருவர், அவரது காலில் விழுந்தார்.

போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரஷீத்தின் இந்தச் செயல் கண்டு வியந்துபோன மாதவன் அவருக்குப் பாராட்டு தெரிவித்து பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ”தமிழ்நாடு காவல் துறையினர் எல்லாவற்றையும் பணயம் வைத்து, நம்முடைய சில முட்டாள் சகோதரர்களை வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்கிறார்கள்.

இந்தக் காவல் ஆய்வாளருக்கு நான் என்னுடைய அன்பு, மரியாதை, நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கரோனா வைரஸ் பாதிப்பு: பாகுபலி பிரபாஸ் நான்கு கோடி ரூபாய் நிதியுதவி

ABOUT THE AUTHOR

...view details