நடிகர் மாதவன் தமிழ், இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவராகத் திகழ்ந்துவருகிறார். சாக்லேட் பாயாக திரைத் துறைக்கு வந்து பின்னர் அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்கள் மனத்தில் இடம்பிடித்தவர்.
பிரபலங்களின் வாரிசுகள் பலர் நடிப்பில் ஆர்வம்காட்டாமல் விளையாட்டுத் துறை மீது அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். அந்த வகையில், நடிகர் மாதவன் மகன் வேதாந்த் சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு பதக்கங்களை வாங்கிக் குவித்துவருகிறார். தற்போது வேதாந்த் லிவிட்டன் ஓபன் ஸ்விம்மிங் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவுக்கு வெண்கலம் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.