நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலமாக ரீ-என்ட்ரி கொடுத்த மாதவன். ‘விக்ரம் வேதா’ படத்திலும் நடிப்பில் மிரட்டியிருந்தார். ஆனால் அதன்பிறகு அவர் தமிழ் படங்கள் எதுவும் இன்னும் திரைக்கு வரவில்லை. அவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துவருகிறார்.
நீர்யானை போட்டோ மீம் - சைவப் பிரியர்களை கலாய்த்த மேடி! - madhavan trolls vegan
நீர்யானை போட்டோ மீம் ஒன்றை ஷேர் செய்து சைவப் பிரியர்களை மேடி ( மாதவன்) கலாய்த்திருக்கிறார்.
பொதுவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துகளை பதிவு செய்யும் மாதவன், நீர்யானை போட்டோ மீம் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில், நீர்யானையிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம்?... பச்சைப் புல், காய்கறிகளைத் தின்றுவிட்டு நடப்பதால் உடல் எடை குறையப்போவதில்லை என குறிப்பிட்டிருக்கிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் கலாய்த்தாலும் சைவ உணவால் உடல் எடை குறையும் என்பதே உண்மை, சைவம் சாப்பிட்டால் நீங்கள் ஸ்டிராங்கா இருக்கலாம் என வெவ்வேறு கருத்துகளை கமெண்ட் செய்துவருகின்றனர்.