கேரள காவல் துறையினர் 1994ஆம் ஆண்டு கிரையோஜினிக் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாரயணனை கைது செய்தனர். பின்னர் நம்பி நாராயணன் இந்த வழக்கில் நிரபராதி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் எனவும் கூறியது.
இந்நிலையில், விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்கையை மையமாக வைத்து 'ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்' என்னும் படத்தை எடுக்கவுள்ளதாக நடிகர் மாதவன் அறிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாது இந்தப் படத்தின் மூலம் மாதவன் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இதில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். சி.எஸ். சாம் இசையமைத்துள்ள இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில், "ஒரு நாய அடிச்சு கொல்ல முடிவு பண்ணிட்டா...அதுக்கு வெறிநாய்ன்னு பட்டம் கொடுத்தா போதும்; ஒரு மனுஷன தலை தூக்க முடியாத அளவுக்கு அடிச்சு கொல்லனும்னா அவனுக்கு தேசத்துரோகின்னு பட்டம் கொடுத்தா போதும்" போன்ற வசனங்கள் ட்ரெய்லர் முழுவதும் ஆக்கிரமித்துள்ளது.
இந்தப் படத்தில், நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். தற்போது வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லர் பிரபலங்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என ட்ரெய்லரில் அறிவிக்கப்பட்டுள்ளது.