நடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துவருகிறார். அவரது தோற்றத்திற்கு மாறுவதற்காக நீண்ட காலமாக முடி, தாடியை வளர்த்துவந்தார்.
வெள்ளை தாடி, மீசைக்கு விடைகொடுத்த மாதவன்! - நம்பி நாராயணன்
இரண்டு வருடங்களாக தாடி, முடியுடன் சுற்றி வந்த நடிகர் மாதவன், தற்போது அதற்கு விடை கொடுத்து புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார்.
![வெள்ளை தாடி, மீசைக்கு விடைகொடுத்த மாதவன்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3281570-698-3281570-1557848675102.jpg)
இந்த வாழ்கை வரலாற்றுப் படத்திற்காக, நடிகர் மாதவன் இரண்டு வருடங்களாக வெள்ளை தாடி, மீசையுடன் வலம்வந்து கொண்டிருந்தார். அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், வெள்ளை தாடி, மீசையை நீக்கிவிட்டு ரசிகர்கள் அன்போடு அழைக்கக் கூடிய மேடியாக மாறியுள்ளார் நடிகர் மாதவன்.
இது குறித்து மாதவன் தனது டிவிட்டர் பக்கத்தில் "இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் முகச்சவரம் செய்து கொண்டதாகவும், இளமையான விஞ்ஞானி நம்பி நாராயணன் ரெடியாகிவிட்டார்" எனவும் பதிவிட்டுள்ளார். இந்தத் திரைப்படம், பல நாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட பிறகுதான் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.