தளபதி விஜய் தனது 47ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையொட்டி திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ‘மாநாடு’ படக்குழுவினர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர் ஸ்பேசில் இன்று (ஜூன் 22) மாநாடு படக்குழுவினர் கலந்துகொண்டு ரசிகர்களுடன் உரையாடினர். சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு, எஸ்.ஜே. சூர்யா என மாநாடு படத்தின் முக்கிய நபர்கள் அனைவரும் ஆஜராகி இருந்தனர். இதில், அனைவரும் தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துவிடுவோமா எனக் கூறி ஒன்றாக இணைந்து விஜய்யை வாழ்த்தினர்.