'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்திற்குப் பின் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டிருந்த சிம்பு, விரைவில் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கவுள்ளார்.
சமீபத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், கல்யாணி பிரியதர்ஷன், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அறிவித்தார்.
இன்று பிறந்த நாளை சிம்பு கொண்டாடி வருகிறார். இதனையடுத்து இப்படத்தில் சிம்பு 'அப்துல் காலிக்' என்னும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு, தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.