மாநாடு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது தொடர்பாக தொடர்பாக உலா வரும் கிண்டல் மீம்ஸ்களுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலடி கொடுத்துள்ளார்.
சிம்பு நடித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதையடுத்து உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா பீதி காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தையும் தற்காலிமாக நிறுத்துவதாக திரைத்துறையினர் அறிவித்தனர்.
அதற்கேற்றார்போல் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்றுக்கொண்டிருந்த பல படங்களில் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து மாநாடு படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் சிம்புவை கலாய்த்து பல்வேறு மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
இதையடுத்து, இதற்கு மாநாடு படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டரில் பதிலடி அளித்துள்ளார்.
அதில், சிம்புவையும், சுரேஷ் காமாட்சியையும் வைத்து கலாய்க்கப்பட்ட மீம் வீடியோ ஒன்றை இணைத்து, "கிரேன் விழுந்து எங்கள் சகோதரர்களை இழந்ததையே எங்களால் இன்னமும் மறக்க இயலவில்லை. இந்தக் கொரோனாவுக்கா இடம் கொடுப்போம்?
இந்த Back up இல் ரொம்பவே வருந்தியவரும், உழைப்பாளிகளின் பாதுகாப்பு முக்கியம் எனக் கருதியவரும் எங்கள் #STR தான். மீண்டும் கெத்தா தொடங்கும் எங்கள் "மாநாடு" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் மாநாடு படத்தில் சிம்பு ஹீரோவாகவும், எஸ்ஜே சூர்யா வில்லனாகவும் நடிக்கிறார்கள். கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கிறார்.
கடந்த 11ஆம் தேதி மாநாடு படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்றது. இதையடுத்து படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பீதியால் வரும் 31ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது.