நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு (Maanaadu) படத்தின் ப்ரீ ரிலீஸ் ட்ரெய்லர் ஒரேநாளில் ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், 'மாநாடு'. இதில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாகிறது. யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த மாதம் வெளியான படத்தின் ட்ரெய்லரும், இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், 'மாநாடு' படம் வெளியாக இன்னும் ஒருவாரம் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரீ ரிலீஸ் ட்ரெய்லர் (Maanaadu Pre Release Trailer) நேற்று (நவம்பர் 19) வெளியானது. அதில் இடம்பெற்றுள்ள 'வர்றேன்... திரும்ப வர்றேன்' எனச் சிம்பு பேசிய வசனம் சமூக வலைதளங்களில் பலத்த வரவேற்பைப் பெற்றது.
மேலும் ப்ரீ ரிலீஸ் ட்ரெய்லர் வெளியான 14 மணி நேரத்தில் யூ-ட்யூப் தளத்தில் ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதனைப் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:MaanaaduPreReleaseTrailer: இந்த 'மாநாடு' நடக்கக் கூடாது - திரும்பி வந்த சிம்பு