தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மாநாடு ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியீடு - simbu Maanaadu movie

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாநாடு
மாநாடு

By

Published : Dec 18, 2021, 10:01 AM IST

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி வெளியான படம் 'மாநாடு'. இதில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படமானது வெளியான முதல் வாரத்தில் உலகளவில் 50 கோடி ரூபாய் வசூல்செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் படம் வெளியாகி நான்கு வாரங்கள் எட்டியுள்ள நிலையில், ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மாநாடு திரைப்படம் வரும் 24ஆம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மாநாடு ஓடிடி ரிலீஸ் தேதி

இதே நாளன்றுதான் திரையரங்குகளில் பா. இரஞ்சித்தின் ரைட்டர், விக்னேஷ் சிவனின் ராக்கி, அதர்வாவின் குருதி ஆட்டம் ஆகிய படங்களும் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:40 கதை சர்ச்சை: தள்ளிப்போனது அஸ்வின் படம்

ABOUT THE AUTHOR

...view details