கோயம்புத்தூர்:திரையரங்கு ஒன்றில் மாநாடு திரைப்படத்தின்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பந்தயசாலை காவல் துறையினர், ஒரு தரப்பில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரன், கெளதம், கதிரன் ஆகிய மூவரை கைதுசெய்துள்ளனர். மீதமுள்ள எழுவரைத் தேடிவருகின்றனர்.
மற்றொரு தரப்பில் முகமது அசாருதீன், அப்துல் ரகுமான், முகமது அஸ்பர், முகமது சல்மான், ஷாநவாஸ் ஆகிய ஐவர்மீது வழக்குப்பதிந்து கைதுசெய்தனர்.