வெங்கட் பிரபு எழுதி இயக்கி, சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படம் ’மாநாடு’. சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
மாநாடு திரைப்படம் வெளியிடப்பட்டபோது, படம் பார்க்க திரையரங்கம் வருபவர்கள் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்ததாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து தடுப்பூசி கட்டாயம் பாேட வேண்டும் என்ற பொது சுகாதாரத்துறையின் உத்தரவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் படத்தில் தற்போது புகையிலை கட்டுப்பாட்டுக்கான எச்சரிக்கை வாக்கியம் இடம் பெறாதாது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் சிரில் அலெக்சாண்டர் தமிழ்நாடு மருத்துவத்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.