தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'மாமனிதன்' விஜய்சேதுபதி படத்தின் டப்பிங் ஸ்டார்ட்...! - காயத்ரி சங்கர்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் மாமனிதன் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.

mamanithan

By

Published : Aug 6, 2019, 7:48 PM IST

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’ ஆகிய படங்களில் நடித்தார்.

இதில், ‘இடம் பொருள் ஏவல்’ இன்னும் ரிலீசாகவில்லை. தற்போது நான்காவது முறையாக சீனுராமசாமியுடன் மாமனிதன் படத்தில் விஜய்சேதுபதி இணைந்துள்ளார். இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துவருகிறார்.

சீனு ராமசாமி ட்வீட்

இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி சங்கர் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இசைஞானி இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்து வருகின்றனர்.

இந்நிலையில் 'மாமனிதன்' படம் குறித்த புதிய தகவலை இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில், 'கடைசி விவசாயி', 'சங்கத்தமிழன்', 'லாபம்' உள்ளிட்ட படங்களின் இறுதிக்கட்ட பணிகளும் தற்போது நடைபெற்றுவருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details