தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் கூட்டணியான மணிரத்னம் - வைரமுத்து இடையே பிரிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது. 'இதயகோயில்' படத்தின் மூலமாக மணிரத்னத்துடன் இணைந்த வைரமுத்து, 'ரோஜா' படத்துக்குப் பிறகு அவரின் ஆஸ்தான பாடலாசிரியராக மாறினார். கடைசியாக மணிரத்னம் இயக்கிய 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படம் வரை வைரமுத்துவின் கைவண்ணத்தில்தான் பாடல்கள் உருவாகின. தற்போது மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் இந்தக் கூட்டணியில் விரிசல் எனக் கூறப்படுகிறது.
பெண்கள் தங்களுக்கு நேரும் பாலியல் கொடுமைகள் குறித்து பதிவு செய்யும் #Metoo புகாரில் வைரமுத்து சிக்கியதே இதற்குக் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.