தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சரவணன் அருளின் படம் குறித்தான புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் பாடல்களை கவிஞர் பா. விஜய் எழுதுவதாக படக்குழு அறிவித்தது.
சரவணன் அண்ணாச்சி நடிக்கும் படத்தின் புதிய அப்டேட் - சரவணா ஸ்டோர் புரொடக்ஷனில் இணையும் பா விஜய்
லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தயாரித்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகிள்ளது.
lyricist P Vijay to join the cast of Saravana store productions
பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்தப் படத்தில் இணைந்தது குறித்து பா. விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பகிர்ந்தார். அதில் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷனில் பணிபுரிய தான் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், சரவணன் அருளுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்