என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்
அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்
என் தந்தையின் பாடல்கள் சொக்க தங்கம்
அவர் எங்கள் காட்டில் சிங்கம்
என் தந்தையின் வரிகள் முத்து
அவர் தான் எங்களின் சொத்து
என் தந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்
அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்
என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா
எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர்தான் ராஜா
எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள்தான் அப்பா
இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா!
இவ்வாறு நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன் எழுதியுள்ள அந்தக் கவிதை நிறைவுபெறுகிறது.
நா.முத்துக்குமாரின் ஆதவன் பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கன்னிகாபுரத்தில் பிறந்தவர். இவர் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார். இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.
இயக்குனர் சீமானின் வீரநடை என்ற படத்தில் பாடம் எழுத தொடங்கினார். 2007ஆம் ஆண்டு வெளியான கிரீடம் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.
பெரும் போராட்டத்துக்கு மத்தியில் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெற்ற மகா கலைஞர்களுள் நா.முத்துக்குமாரும் ஒருவர். கலைஞர்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், வழிகாட்டியாக தொடர்கிறார்கள்.!
இதையும் படிங்க: ஆணவத்தை அன்பில் எரி - வைரலாகும் ஆதவன் நா. முத்துக்குமார் எழுதிய கவிதை