தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

லைகா தயாரிப்பில் யோகி பாபு - yogi babu movies

நடிகர் யோகி பாபு நடிக்கும் புதிய படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லைகா - யோகி பாபு
லைகா - யோகி பாபு

By

Published : Oct 18, 2021, 6:58 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. ஆண்டுக்கு இவரது நடிப்பில் குறைந்தது ஐந்து முதல் ஆறு படங்கள் வரை வெளியாகிறது.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் இவரது காமெடி பெரிதும் பேசப்பட்டது. இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி, ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் யோகிபாபு நாயகனாக நடிக்கும் அடுத்த படத்தை புதுமுக இயக்குநர் அருண் செழியன் இயக்கவுள்ளார். மேலும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் வடிவேலு நடிக்கும், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை தற்போது லைகா நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பெங்களூர் இனோவேட்டிவ் விழாவில் விருது வென்ற கட்டில்

ABOUT THE AUTHOR

...view details