தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கரோனா நிதி : முதலமைச்சரிடம் ரூ. 2 கோடி வழங்கிய லைகா நிறுவனம்

முதலமைச்சர் ஸ்டாலினிடம் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் லைகா சார்பில் கரோனா நிதியாக ரூ. 2 கோடி வழங்கப்பட்டது.

lyca
lyca

By

Published : Jun 19, 2021, 5:38 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அப்படி அளிக்கப்படும் நன்கொடைகள் ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், தடுப்பூசிகள், பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாக பயன்படுத்தப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

முதலமைச்சரின் இந்த வேண்டுகோளையடுத்து திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் நிதியுதவி வழங்கிவருகின்றனர்.

அந்த வகையில், தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்‌ஷன் ரூ.2 கோடி வழங்கியுள்ளது. இந்த காசோலையை முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து லைகா புரொடக்‌ஷன் அல்லிராஜா சுபாஸ்கரன் சார்பில், லைகா நிர்வாகி தமிழ்குமரன், நிருதன், கெளரவ் ஆகியோர் வழங்கினார்.

இதையும் படிங்க: முதலமைச்சரின் பொது நிவாரண நிதி: ரூ. 1 கோடி வழங்கிய தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ்

ABOUT THE AUTHOR

...view details