மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை வைத்துநடிகர் பிரித்விராஜ்முதன் முதலாக இயக்கியப்படம்'லூசிபர்'
2019ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மஞ்சு வாரியார், டொவினோ தாமஸ், இந்திரஜித், விவேக் ஓபராய் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. ’பொலிட்டிக்கல் த்ரில்லர்’ படமாக உருவான இப்படம், மிகக் குறுகிய நாள்களுக்குள் 100 கோடி வசூலித்து அந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தது.
மேலும், மலையாள சினிமா தாண்டி இப்படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பு காரணமாக பிற மொழிகளிலும் படத்தின் ரீமேக் உரிமைகள் வாங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.