தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தமிழில் வெளியாகும் மோகன்லாலின் 'லூசிஃபர்'! - விவேக் ஓபராய்

மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான 'லூசிஃபர்' படம் தமிழிலும் வெளியாகவுள்ளது.

Poster

By

Published : Apr 27, 2019, 3:09 PM IST

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகர் பிருத்திவ் ராஜ் இயக்குநராக 'லூசிஃபர்' படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடித்திருக்கிறார்.

மேலும், இப்படத்தில் மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், விவேக் ஓபராய், கலாபவன் சஜோன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அரசியல் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மார்ச் 28ஆம் தேதி வெளியான இப்படம் மலையாளத் திரையுலகில் மாபெரும் வசூலை ஈட்டியுள்ளது.

இப்படத்திற்கு முரளி கோபி கதை, திரைக்கதை எழுதியுள்ளார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவும், சம்ஜித் முஹமத் படத்தொகுப்பும் செய்துள்ளனர். தீபக் தேவ் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஆசீர்வாத் சினிமா தயாரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தை தமிழில் மே 3ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை தமிழில் கலைப்புலி S தாணுவின் வி கிரியேஷன் வெளியிடுகிறது.

ABOUT THE AUTHOR

...view details