தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நயன்தாராவுக்கு பாட்டு பாடிய எல்ஆர்.ஈஸ்வரி! - rj balaji and nayanthara

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் படத்தில் பிரபல பாடகி எல்ஆர்.ஈஸ்வரி அம்மன் பாட்டு பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

nayanthara
nayanthara

By

Published : Jun 6, 2020, 2:02 AM IST

முதன் முறையாக நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தை ஆர்.ஜே.பாலாஜி, என்ஜே சரவணனும் இணைந்து இயக்கியுள்ளனர். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் மே மாதம் வெளியாவதாக இருந்தது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மூக்குத்தி அம்மன் படத்தின் புகைப்படங்களை ஆர்.ஜே. பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நயன்தாரா அம்மன் வேடத்தில் இருப்பது, அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுப்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்தப் படத்தில் நயன்தாராவுடன் மெளிலி, ஊர்வசி, அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இவர்கள் மட்டுமின்றி கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், இந்துஜா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். இதைவிட பெரிய சர்ப்ரைஸ் என்னவென்றால், பக்தி பாடல்களால் பிரபலமான எல்ஆர்.ஈஸ்வரி இப்படத்தில் நடித்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஒஸ்தி படத்தில் இவர் பாடிய பாடல் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. அதேபோன்று "மூக்குத்தி அம்மன்" படத்தில் பொங்கல் வைப்போம் என்ற பாடலை பாடியுள்ளார் என்ற கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.

எல்ஆர் ஈஸ்வரியுடன் ஆர்.ஜே. பாலாஜி

எப்போதும் வித்தியாசமாக யோசிக்கும் ஆர்.ஜே.பாலாஜி இப்படத்தில் ரசிகர்களுக்கு முடிச்சுகளை அவிழ்க்க முடியாத பல திருப்பங்களை தருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எல்ஆர்.ஈஸ்வரியுடன் ஆர்.ஜே.பாலாஜி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:'மூக்குத்தி அம்மன்' கதை இதுதானாம்!

ABOUT THE AUTHOR

...view details