ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய ஹர்பஜன், தமிழில் ட்வீட் செய்வது, தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இவர் தற்போது 'பிரண்ட்ஷிப்' என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
சந்தானத்தின் ‘டிக்கிலோனா’, தமிழ் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ள ஹர்பஜன், ‘அக்னி தேவி’ படத்தை இயக்கிய ஜேபிஆர் - சாம் சூர்யா இயக்கத்தில் உருவாகும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் தமிழ் படத்தில் முன்னணி கதாபாத்திரமாக நடிப்பது இதுவே முதல்முறையாகும். இந்தப் படத்தை பி.ஸ்டாலின், ஜேபிஆர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் 'பிக்பாஸ் புகழ்' லாஸ்லியா, ஆக்ஷன் கிங் அர்ஜூன், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.