தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘அசுரன்’ படத்தில் தனுஷுடன் நடித்த லண்டன் பிரபலம்! - vetrimaran movies

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அசுரன்’ திரைப்படத்தில் டீஜேய் எனும் லண்டனைச் சேர்ந்த பாடகர் நடித்துள்ளார்.

Teejay

By

Published : Sep 9, 2019, 12:40 PM IST

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘அசுரன்’. இதில் கென் கருணாஸ், பசுபதி, ராஜேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அசுரன் - தனுஷ்

கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இத்திரைப்படம், எழுத்தாளர் பூமணியின் ’வெக்கை’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. நேற்று இதன் டிரெய்லர் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

டீஜேய் அருணாசலம்

இதில் லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகர் டீஜேய் அருணாசலம் நடித்துள்ளார். இவர் 2013ஆம் ஆண்டு வானவில் (The quest) எனும் ஆல்பத்தை வெளியிட்டார். அதில் ‘முட்டு முட்டு’ என்ற பாடல் சமூக வலைதளங்களில் வைரலானது. இவர் தனுஷ் மகனாக ‘அசுரன்’ படத்தில் நடித்துள்ளார். தனுஷின் சிறு வயது மகனாக கென் கருணாஸ் நடிக்க, இளம் வயது மகனாக டீஜேய் நடித்திருக்கிறார். இதில் இவருடைய கதாபாத்திரம் பெரிதும் பேசப்படும் எனக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details