தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வீடு தேடி வரும் லொள்ளு மன்னர்கள் - விரைவில் 'லொள்ளு சபா -2'! - தாம்சன்

பத்து வருடங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட் அடித்த லொள்ளு சபா நிகழ்ச்சி மீண்டும் லொள்ளு சபா -2 வாக ஒளிபரப்பாக இருக்கிறது.

லொள்ளு சபா -2

By

Published : Apr 11, 2019, 9:02 PM IST

தமிழில் வெற்றி பெற்ற படங்களை கலாய்த்து இளைஞர்களின் மனதை கவர்ந்த பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. இந்நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. சின்னத்திரையின் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் சந்தானம், யோகி பாபு, டேனியல், மனோகர், சுவாமிநாதன் ஆகியோர் வெள்ளித்திரையில் வெற்றி பெற்று மக்களின் மனதில் இடம்பிடித்தனர்.

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களின் படத்தில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தார். தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இதேபோன்று யோகி பாபு ரசிகர்களின் மனதை கவரும் வகையில் காமெடி மற்றும் கதாநாயகன் என முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பத்து வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி தற்போது மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறது. லொள்ளு சபா-2 நிகழ்ச்சியில் சந்தானம் நடித்த முக்கிய கதாபாத்திரத்தில் பாலா இயக்கத்தில் உருவான தாரை தப்பட்டை படத்தில் நடித்திருந்த அமுதவாணன் நடிக்க இருக்கிறார். மேலும், ஜோடி நம்பர் ஒன் டைட்டில் வின்னர், கலக்கப்போவது யாரு-2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரும் ஆவார். இந்த லொள்ளு சபா-2 நிகழ்ச்சியை தாம்சன் இயக்க இருக்கிறார். இதில் வடிவேல் பாலாஜி, பழனி பட்டாளமும் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் பயங்கர எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details