தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விவேக் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி ஓடிடியில் வெளியீடு! - நடிகர் விவேக்

மறைந்த நடிகர் விவேக் கடைசியாக பங்கேற்ற நகைச்சுவை நிகழ்ச்சி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

LOLEngaSiriPaapom
விவேக் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி ஓடிடியில் வெளியீடு!

By

Published : Aug 9, 2021, 6:37 PM IST

சென்னை:தனது அனைத்து திரைப்படங்களிலும் மக்களுக்கு கருத்துகளை சொல்லக்கூடியவர் நடிகர் விவேக். இவர், கடந்த ஏப்ரல் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இவர் நடித்த சில திரைப்படங்கள் வெளிவரவுள்ள நிலையில், இவரும், நடிகர் மிர்ச்சி சிவாவும் இணைந்து தொகுத்து வழங்கிய ரியால்டி ஷோ அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், விஜய் டிவி புகழ், நகைச்சுவை நடிகர் சதீஷ், பவர் ஸ்டார் உள்ளிட்ட 10 நகைச்சுவை நடிகர்கள் பங்கேற்றுள்ளனர்.

LOLEngaSiriPaapom

இவர்களில் யார் கடைசிவரை சிரிக்காமல் இருக்கிறார்களோ அவரே வெற்றியாளர் என்பது இந்நிகழ்ச்சியின் விதி. 'லொல்: எங்க சிரி பாப்போம்' என தலைப்பிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி ஆறு எபிசோடுகளாக ஆகஸ்ட் 27ஆம் தேதி ஸ்ட்ரீமாக உள்ளது.

இதையும் படிங்க:அண்ணாத்த டப்பிங்கை முடித்த ரஜினி!

ABOUT THE AUTHOR

...view details