‘மாநகரம்’ என்ற வெற்றிப் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய ’கைதி’, ‘மாஸ்டர்’ திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.
லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய டாப் இயக்குநர்கள்! - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படங்கள்
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை கெளதம் மேனன், மணிரத்னம் உள்ளிட்ட டாப் இயக்குநர்கள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ்
இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடந்த 14ஆம் தேதி தனது 35ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதையொட்டி இயக்குநர்கள் கௌதம் மேனன், மணிரத்னம், ஷங்கர், வசந்தபாலன், சசி, லிங்குசாமி ஆகியோர் அவருக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், “இதுதான் என்னுடைய சிறந்த பிறந்தநாள். அனைவருக்கு மிக்க நன்றி” என்று மிகவும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.