தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அட, இவர்தான் கமலுக்கு வில்லனா... விக்ரம் அப்டேட் வழங்கிய லோகேஷ்! - விக்ரம் அப்டேட்

சென்னை: கமல் நடிப்பில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தில் பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.

Lokesh
Lokesh

By

Published : Apr 7, 2021, 1:25 PM IST

Updated : Apr 7, 2021, 1:36 PM IST

விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்தாக கமலை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கவுள்ளார். முன்னதாக கமலின் பிறந்தநாளானா நவம்பர் ஏழாம் தேதி படத்தின் டீசர் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கமல் ஹாசனின் 232ஆவது படமான 'விக்ரம்' கேங்ஸ்டர் பட ஸ்டைலில் உருவாகவுள்ளது. ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், காவல் துறை அலுவலர்களை விருந்துக்கு அழைத்து அவர்களை வேட்டையாடுவது போன்று காட்சிகள் இப்படத்தின் டீசரில் முன்னதாக இடம்பெற்றிருந்தன. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவித்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஃபகத் பாசில் நடிக்க உள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வெளியானது.

இந்நிலையில், சமீபத்தில் ஃபகத் பாசில் ஒரு நேர்காணலில் அதனை உறுதி செய்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் அரசியல்வாதியாக தான் நடிக்க இருப்பதாகவும், கதாபாத்திரம் பிடித்திருந்ததால் உடனே சம்மதம் தெரிவித்தாகவும் ஃபகத் பாசில் கூறியுள்ளார்.

ஃபகத் ஃபாசில்

தற்போது லோகேஷ் கனகராஜ் - கமல்ஹாசன் இருவரும் தனி விமானத்தில் இருக்கும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Last Updated : Apr 7, 2021, 1:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details