தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'சத்யா' பட பாடல் ரீமேக்: இது வெறும் மலரும் நினைவுகள் அல்ல; மாறா அன்பு - கமல் ஹாசன் ட்வீட் - சிம்பா பட இயக்குனர்

'சத்யா' படத்தின் பாடலை ரீமேக் செய்த குழுவினருக்கு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சத்யா படப்பாடல் ரீமேக்
சத்யா படப்பாடல் ரீமேக்

By

Published : Aug 10, 2020, 8:46 PM IST

இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் பரத், பிரேம்ஜி நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'சிம்பா'. இதில் பரத்துக்கு ஜோடியாக பானுஸ்ரீ நடித்திருந்தார். போதைப்பொருட்கள் பயன்படுத்துவோரின் உலகமும் அங்கு நடக்கும் நகைச்சுவையையும் மையமாக வைத்து ஸ்டோனர் ப்ளாக் காமெடி என்ற ஜானரில் இப்படம் உருவாகியிருந்தது.

பாடலின் ஒரு காட்சியில்...
தற்போது அரவிந்த் ஸ்ரீதர் கமல் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'சத்யா' படத்தின் 'போட்டா படியுது' பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளார். இப்பாடல் காணொலியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
பாடலின் மற்றொரு காட்சியில்...
இப்பாடலின் காணொலியைப் பார்த்த கமல்ஹாசன் பாடலை ரீமிக்ஸ் செய்த குழுவினரை மனதாரப் பாராட்டி உள்ளார். இப்பாடல் குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "இது வெறும் மலரும் நினைவுகள் அல்ல, மாறா அன்பு. இதற்குப் பதில் பரிசு என் மாறா அன்பு மட்டுமாகவே இருக்க முடியும். என் நீண்ட பயணத்தில் என்னை அயர்வின்றி நடத்தும் சக்தியும் அதுதான்" என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details