லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்தது 'மாஸ்டர்' திரைப்படம். ஆனால் கரோனா நோய்த் தொற்று காரணமாக திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.
தற்போது ஊரடங்கை சில தளர்வுகளோடு மாநில அரசு நீட்டித்துள்ளது. இந்நிலையில், வேலைகளை செய்யலாம் என மாநில அரசு தெரிவித்திருந்தது. இதனால், 'மாஸ்டர்' திரைப்பட குழு அடுத்தக்கட்ட வேலைகளை தொடங்கியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இதனால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். இதற்கிடையில், ஸ்டுடியோவில் இருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லோகேஷ் பகிர்ந்துள்ளார்.