தமிழில் ‘யங் மங் சங்’, ‘பஹிரா’, 'பொய்க்கால் குதிரை', ’மை டியர் பூதம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துவருகிறார் பிரபு தேவா. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'தேள்' திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தற்போது சாம் ரோட்ரிக்ஸ் இயக்கும் திரைப்படத்தில் பிரபுதேவா நடித்துவருகிறார். மாஸ்டர் மகேந்திரன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். 'முசாசி' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜாய் ஃபிலிம்ஸ் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.