தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
இதுவரை 4 சீசன்கள் நடைபெற்று முடிந்த நிலையில், அதன் அனைத்து சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
இந்நிலையில் 5ஆவது சீசன் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இன்று மாலை 5.55 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யும், தனியார் தொலைக்காட்சி, பிக்பாஸ் சீசன் 5 குறித்த லோகோவை தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர இருக்கிறது என்பது தான்.