தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'செய்ற தப்பில் இருந்து, நாம் கள்ளம் கற்கிறோம்' - 'லாக்கப்' சொல்லும் செய்தி! - லக்கப்

'சிக்ஸர்' படத்தைத் தொடர்ந்து நடிகர் வைபவ் நடிப்பில், உருவான 'லாக்கப்' படத்தின் டீஸசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Lockup

By

Published : Nov 12, 2019, 10:45 PM IST

வெங்கட் பிரபுவின் சரோஜா திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் வைபவ். கோவா, ஈசன், மங்காத்தா, ஆம்பள உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவந்த இவர், 'மேயாத மான்' படம் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

தற்போது வைபவ், வெங்கட் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லாக்கப்' . கிரைம் த்ரில்லர் கதையம்சத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தை இயக்குநர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்த எஸ்.ஜி. சார்லஸ் இயக்குகிறார். இதில் வைபவுக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகை வாணி போஜன் நடிக்கிறார்.

படத்தின் டீஸரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார். கெளதம் மேனன் இந்த டீஸருக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இதில் இயக்குநர் வெங்கட் பிரபு காவல் துறை அலுவலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'ஜருகண்டி' திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா 'லாக்கப் ' படத்தைத் தயாரித்துள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பாக நடக்கும் விசாரணையும், அதில் இருந்து தப்பிக்க செய்யும் முயற்சியையும் விறுவிறுப்பு காட்சிகளாக டீஸரில் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:

சிவகார்த்திகேயனுடன் சீறிப் பாயும் ஜீவா!

ABOUT THE AUTHOR

...view details