தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கோலிவுட்டில் இன்று எத்தனை படம் ரிலீஸ் தெரியுமா! - friendship movie

கோலிவுட்டில் இன்று (செப் 17) ஒரேநாளில் மூன்று திரைப்படங்கள் வெளியாகிறது.

திரையரங்கம்
திரையரங்கம்

By

Published : Sep 17, 2021, 10:58 AM IST

கரோனா இரண்டாம் அலை காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த மாத இறுதியில் திறக்கப்பட்டன. அப்போது பெரிய நடிகர்கர்களின் படங்கள் வெளியாகாத நிலையில், சிறிய நடிகர்களின் படங்கள் மட்டும் வெளியானது.

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் விஜய் சேதுபதியின் 'லாபம்', ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' ஆகியவை திரையரங்குகளில் வெளியாகின. இதுதவிர விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்', 'டிக்கிலோனா' ஆகியவை ஓடிடி தளங்களில் வெளியானது.

இதனைத் தொடர்ந்து இன்று (செப் 17) விஜய் ஆண்டனி நடித்த 'கோடியில் ஒருவன்', லாஸ்லியா- ஹர்பஜன் சிங் நடித்த 'பிரண்ட்ஷிப்' ஆகிய இருபடங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. இது தவிர விஜய் சேதுபதியின் 'அனபெல் சேதுபதி' டிஸ்னி ப்ளஸ் ஹாஸ் டாரில் வெளியாகியுள்ளது.

இதில் கோடியில் ஒருவன் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 367 திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் கர்நாடகாவில் 125, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 327 என மொத்தம் 819 திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையும் படிங்க:வடிவேலு vs சதிஷ்- யாருக்கு நாய் சேகர் தலைப்பு

ABOUT THE AUTHOR

...view details