தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அமேசான் பிரைமில் வெளியாகும் ஏழு இந்திய படங்கள் - அமேசான் பிரைமில் வெளியாகும் படங்கள் பட்டியல்

எதிர்பார்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் இடையே அமேசான் பிரைம் தளத்தில் திரைப்படங்கள் வரிசைக்கட்டி வெளியாக உள்ளன. மே முதல் ஜூலை வரை வெளியாகயிருக்கும் இந்தத் திரைப்படங்கள் குறித்தும் வெளியீட்டு தேதி குறித்தும் விரிவாக பார்க்கலாம்...

list of Seven Indian films released by Amazon Prime
list of Seven Indian films released by Amazon Prime

By

Published : May 17, 2020, 4:59 PM IST

மே மாதம் 29ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் தளத்தில் ஜோதிகா, பார்த்திபன், பாக்கியராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் வெளியாக உள்ளது.

அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் சாதாரண மக்களின் அன்றாடப் போராட்டங்களை சித்தரிக்கும் குடும்ப நகைச்சுவை திரைப்படமான 'குலாபோ சிதாபோ' (Gulabo Sitabo) ஜூன் 12ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் தமிழ், தெலுங்கில் 'பென்குயின்' திரைப்படம் ஜூன் 19ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.

அஸ்வினி, புனித் ராஜ்குமார், குருதுத் தல்வார் ஆகியோர் தயாரித்துள்ள 'லா' (Law) கன்னட திரைப்படம் மே 26ஆம் தேதி, அஸ்வினி புனீத் ராஜ்குமார் தயாரிப்பில் 'ஃப்ரெஞ்ச் பிரியாணி' ஜூலை 24ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்பட உள்ளது. இதேபோன்று, நடிகை வித்யாபாலன் கதாநாயகியாக நடித்துள்ள 'சகுந்தலா தேவி' (Shakuntala Devi) எழுத்தாளரும், கணிதவியலாளருமான சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்றுப் படமாகும். இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க... டிஜிட்டலில் வெளியாகும் வித்யாபாலனின் 'சகுந்தலா தேவி'

விஜய்பாபுவின் ஃபிரைடே ஃபிலிம்ஸ், ஹவுஸால் தயாரிப்பில் நாரனிபுழா ஷானவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாள படம் 'சுஃபியும் சுஜாதாயும்' (Sufiyum Sujathayum). அதிதி ராவ் ஹைதரி, ஜெயசூர்யா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

பொன்மகள் வந்தாள்

இது குறித்து அமேசான் பிரைம் வீடியோ இந்தியாவின் இயக்குநரும், தேசிய பொது மேலாளருமான கெளரவ் காந்தி கூறுகையில், 'வாடிக்கையாளர்களுக்குப் பிடித்த தளமாக அமேசான் பிரைம் இந்தியா மாறியுள்ளது. இப்போது இதை ஒருபடி மேலே கொண்டுச் செல்கிறோம். இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஏழு திரைப்படங்கள் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படங்களின் வெளியீட்டை இந்திய பார்வையாளர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்தபடி வசதியாகவும், தங்களுக்கு விருப்பமான திரையிலும் இவற்றை பார்த்து ரசிக்க முடியும். இந்தத் தளம் இந்தியாவில் 4000க்கும் மேற்பட்ட டவுன் நகரங்களில் பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உலகளாவிய ரீதியில் சென்றடைவதன் வழியாக இந்தப் படங்களுக்கு ஒரு பெரிய வெளியீட்டுத் தளத்தை அளிக்கிறது. ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள் ஃபயர் டிவி, ஆப்பிள் டிவி, ஏர்டெல், வோடோஃபோன், பிஎஸ்என்எல், போன்றவற்றின் பிரைம் வீடியோ ஆப்பில் பிரைம் உறுப்பினர்களால் இந்த வெளியீடுகளை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பார்வையிட முடியும்' என்றார்.

இதையும் படிங்க... ஓடிடி தளத்தில் நேரடியாக வரவிருக்கும் ’பொன்மகள் வந்தாள்’

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details