ஜெனிவீவ் நாஜி இயக்கி நடித்துள்ள நைஜீரிய திரைப்படம் ‘லயன்ஹார்ட்’ (Lionheart). சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதுபெறும் பிரிவில் சமர்பிக்கப்பட்ட இந்தப் படத்தின் சில பகுதிகள் நைஜீரியாவில் பேசக்கூடிய இக்போ மொழியில் உள்ளது. பெரும்பான்மையான பகுதிகள் ஆங்கிலத்தில் இருப்பதால் இந்தப் படத்தை அகாடமி விருதுகளின் நடுவர் குழு புறக்கணித்துள்ளது. ஆனால் நைஜீரியாவில் ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழி என்பதை நடுவர் குழு மறந்துவிட்டது.
இதுகுறித்து அமெரிக்க இயக்குநர் அவா டூவர்னே, ஆங்கில மொழி அதிகம் பேசப்பட்டதற்காக சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதுபெறும் பிரிவில் சமர்பிக்கப்பட்ட முதல் நைஜீரிய திரைப்படத்தை நீங்கள் புறக்கணித்திருக்கிறீர்கள். ஆனால் ஆங்கிலம்தான் நைஜீரியாவின் அதிகாரப்பூர்வ மொழி. நைஜீரியா தனது அதிகாரப்பூர்வ மொழியில் படத்தை சமர்பித்ததற்காகவா அதனை புறக்கணித்தீர்கள் என ஆஸ்கர் நடுவர் குழுவை கேள்வி எழுப்பியுள்ளார்.