1994ஆம் ஆண்டு வெளியான ‘தி லயன் கிங்’ என்னும் கிளாஸிக் அனிமேஷன் திரைப்படத்தின் ரீமேக்தான் தற்போது வெளியாகியுள்ள ‘தி லயன் கிங்’ திரைப்படம். தற்போதைய அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிரட்டலாக படமாக்கியிருக்கின்றனர். ஜான் பெவ்ரோ இயக்கியுள்ள இத்திரைப்படம் ஜூலை 19 அன்று வெளியானது.
பாக்ஸ் ஆஃபிஸில் மிரட்டும் ‘தி லயன் கிங்’ - பாக்ஸ் ஆஃபிஸ்
உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிஸ்னியின் ‘தி லயன் கிங்’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் 'ஸ்பைடர் மேன்: ஃபேர் ஃபுரம் ஹோம்' திரைப்படத்தை விட அதிக வசூல் செய்திருக்கிறது.

lion king
இந்தியாவில் ‘தி லயன் கிங்’ படத்தின் முதல்நாள் வசூல் ரூ. 13.10 கோடி என பாலிவுட் வர்த்தக ஆய்வாளர் தரன் ஆதர்ஷ் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது இது ’ஸ்பைடர் மேன்: ஃபேர் ஃபுரம் ஹோம்’ (ரூ. 10.05 கோடி) திரைப்படத்தை விட பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலை குவிக்கும் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.