பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனான்யா பாண்டே ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘லைகர்’. கரோனா சூழல் காரணமாக இப்படம் ஓடிடியில் வெளியாகப் போகிறது என தகவல் வெளியானது.
ஓடிடி வதந்தி: மீம் ஷேர் செய்து கலாய்த்த விஜய் தேவரகொண்டா - லைகர்
விஜய் தேவரகொண்டா தனது ‘லைகர்’ படம் ஓடிடியில் வெளியாகவிருப்பதாக வந்த மீம் ஒன்றை ஷேர் செய்து கலாய்த்திருக்கிறார்.
இதுகுறித்து மீம் ஒன்று இணையத்தில் உலா வந்தது. அதில், பூரி ஜெகநாத் - விஜய் தேவரகொண்டா கூட்டணியில் உருவாகியுள்ள ‘லைகர்’ திரைப்படம் ஓடிடி மற்றும் அனைத்து மொழிகளுக்கான சேட்டிலைட் உரிமையையும் சேர்த்து 200 கோடி ரூபாய் பெற்றுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை ஷேர் செய்த விஜய் தேவரகொண்டா, இது மிகவும் குறைவான தொகை. நான் தியேட்டரிலேயே இதைவிட அதிக பணம் பார்த்துவிடுவேன் என பதிவிட்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ திரைப்படம் இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.