பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் அடைந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இருப்பினும், அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் அல்லது அது கொலையா என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்னர்.
'ஒற்றுமையாக நிற்போம், சத்தியத்திற்காக நிற்போம்' - சுஷாந்த் தங்கை உருக்கம் - சுஷாந்த் சிங் மரணம்
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் தங்கை சத்தியத்திற்காக ஒன்றாக நிற்போம் என்று பதிவிட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சுஷாந்த் தங்கை
இதற்கிடையில் நடிகர் சுஷாந்த் சிங்கின் தங்கை ஸ்வேதா திவாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடவுளின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "ஒற்றுமையாக நிற்போம், சத்தியத்திற்காக நிற்போம்" என்று குறிப்பிட்டு கடவுளே எங்களைக் காப்பாற்றுங்கள் என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டுள்ளார். இவரின் இப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.