தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கெட் அப் ஓகே...ஆனா கொண்டைய மறந்துட்டேன்: காதலியுடன் டேட்டிங் சென்ற டிகாப்ரியோ - Camila Morrone

ஆஸ்கார் நாயகன் லியார்னடோ டிகாப்ரியோ தனது காதலியுடன் டேட்டிங் சென்ற விவரம் தற்போது ஹாலிவுட் வட்டாரங்களில் பேசும் பெருளாகியுள்ளது.

Leonardo DiCaprio
Leonardo DiCaprio

By

Published : Dec 21, 2019, 6:23 PM IST

ஹாலிவுட்டின் ஆஸ்கர் நாயகன் லியார்னடோ டிகாப்ரியோ, சுற்றுச்சுழல் சார்ந்த பல கருத்துகளை அவ்வப்போது தெரிவித்துவருகிறார். சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோதுகூட அவரது கருத்து பல தரப்பினரையும் கவர்ந்தது. அதேபோல், சமீபத்தில் அமேசான் காடுகளில் ஏற்பட்ட கடும் தீ விபத்து பற்றியும் டெல்லி காற்று மாசு குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார் டிகாப்ரியோ. 45 வயதான லியார்னடோ டிகாப்ரியோ இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

லியார்னடோ டிகாப்ரியோ - கமிலா மோரோன்

இதனையடுத்து, டிகாப்ரியோ தற்போது ஆஸ்பனில் தனது காதலி கமிலா மோரோன் என்பவருடன் கடைத்தெருக்களில் சுற்றியுள்ளார். ரசிகர்கள் தன்னை அடையாளம் காணாமல் இருக்க ஹூடி வடிவ உடையணிந்து பேஸ்பால் தொப்பி - கருப்பு கோட் அணிந்திருந்தார். மேலும் , ஆஸ்பனில் உள்ள தனது நண்பர்கள் - கமிலாவுடன் இரவு உணவை ஒரு ரெஸ்டாரண்ட்டில் முடித்து விட்டு ரகசியமாக வெளியேறியதாக டெய்லி மெயில் யுகே தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு இந்த ஜோடி லியார்னடோ டிகாப்ரியோவின் நண்பரும் நடிகருமான லூகாஸ் ஹாஸூடன் பிரபல கடைகளுக்கு ஷாப்பிங் சென்றுள்ளனர். இதிலும் தனது அடையாளங்களை மறைப்பதற்கு தோல் ஜாக்கெட், பேண்ட், காலணி என அனைத்தையும் கறுப்பு நிறத்தில் அணிந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதையும் வாசிங்க: ஆஸ்கரே தேடிச்சென்று பெருமைகொண்ட நாயகன் லியனார்டோ டிகாப்ரியோவின் சாதனைப் பயணம்!

ABOUT THE AUTHOR

...view details