தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பெங்காலி பாடகி சந்தியா முகோபாத்யாய் மறைவு: மம்தா இரங்கல் - பெங்காலி பாடகி சந்தியா

உடல்நிலை சரியில்லாமல் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் பெங்காலி பாடகி சந்தியா முகோபாத்யாய் சிகிச்சைப் பலனின்றி இன்று (பிப்ரவரி 15) மாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பெங்காலி பாடகி சந்தியா முகோபாத்யாய் மறைவு; மம்தா இரங்கல்
பெங்காலி பாடகி சந்தியா முகோபாத்யாய் மறைவு; மம்தா இரங்கல்

By

Published : Feb 15, 2022, 10:38 PM IST

உடல்நிலை சரியில்லாமல் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் பெங்காலி பாடகி சந்தியா முகோபாத்யாய் சிகிச்சைப் பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 90.

சமீபத்தில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை நிராகரித்ததற்காக, பாடகி சந்தியா தேசியத் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

இந்த ஆண்டு குடியரசு தின விழாவுக்கு முன்னதாக, அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அறிவித்தது. ஆனால், இந்த வயதில் தனக்கு 'பத்ம ஸ்ரீ' விருது வழங்கப்படுவது அவமதிக்கப்படுவதற்குச் சமம் என விவரித்து அவர் பணிவுடன் மறுத்துவிட்டார்.

பத்ம ஸ்ரீ விருது வழங்கி அவமானம்

தனது இசைப் பயணம் எவ்வளவு மாறுபட்டது என்பதை அறியாமல், இளையவர்களுக்கு வழங்கக்கூடிய பத்மஸ்ரீ விருதை ஏன் வழங்கினர் என்பதே அவரது ஆதங்கமாக இருந்தது.

பத்மஸ்ரீ விருதை நிராகரிக்கும் அவரது முடிவுக்கு, மேற்கு வங்க மாநில கலை மற்றும் பண்பாட்டுச் சமூகத்தின் அறிவுசார் பிரிவுகள் ஆதரவு அளித்தன. 'பாரத ரத்னா' விருதுக்குத் தகுதிபெற்ற புகழ்பெற்ற பாடகி சந்தியாவிக்கு, பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவது அவருக்கு அவமானம் எனவும் கூறினர்.

ஆளும் திரிணமுல் காங்கிரஸ் தலைமையும் இந்த வயதில் அவருக்கு விருது வழங்கும் மத்திய அரசின் முடிவை விமர்சித்ததுடன், 'பத்மஸ்ரீ' விருது முக்கியமாக இளைய கலைஞர்களுக்கு வழங்கப்படுவதாகத் தெரிவித்தது.

ஜனவரி 27ஆம் தேதி பாடகி சந்தியா கடுமையாக நோய்வாய்ப்பட்டார். இதனையடுத்து மம்தா பானர்ஜி உடனடியாக அவரது குடும்ப உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு பேசினார். அத்துடன் அவரை அரசு நடத்தும் எஸ்எஸ்கேஎம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றவும் ஏற்பாடுசெய்தார்.

மம்தா ஆழ்ந்த இரங்கல்

பொதுவாக விஐபிகள், விவிஐபிகளுக்கு ஒதுக்கப்படும் வுட்பர்ன் வார்டில் பாடகி சந்தியாவுக்குச் சிகிச்சையளிக்க ஏற்பாடுசெய்தார். வுட்பர்ன் வார்டின் கேபின் நம்பர் ஒன் அவருக்காக ஒதுக்கப்பட்டது. அதன்பின்னர் சந்தியா தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

நரேந்திரநாத் முகர்ஜி - ஹெம்ப்ரோவா தேவி தம்பதியருக்கு கொல்கத்தாவில் மகளாகப் பிறந்தவர் சந்தியா முகோபாத்யாய். மொத்தமிருந்த ஆறு குழந்தைகளில் அவரே இளையவர். உஸ்தாத் படே குலாம் அலி என்பவரிடத்திலேயே இசை பயிற்சி பெற்றார்.

பின்னர் பெங்காலி கவிஞரும், இசையமைப்பாளருமான ஷியாமல் குப்தாவை திருமணம் செய்துகொண்டார். வயதான காலத்தில் தனது மகளுடன் அவர் வசித்துவந்தார். பெங்காலி இசை வட்டாரத்தில் கீதாஸ்ரீ என அனைவராலும் பிரபலமாக அறியப்படுகிறார். தற்போது இவரது மறைவுக்கு மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், "இது மிகவும் வருத்தமான செய்தி. அவர் இப்போது இல்லை என்று என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. அவர் கோவிட் தொற்றிலிருந்து மீண்டு வந்ததன் பின்னர் உடல்நிலை இவ்வளவு வேகமாக மோசமடையும் என்பதை நான் உணரவில்லை. அவர் எப்போதும் ஒழுக்கமான வாழ்க்கையைக் கடைப்பிடித்துவந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சிபிராஜ் படத்திற்கு இசையமைக்கும் வித்யாசாகர் மகன்!

ABOUT THE AUTHOR

...view details